View My Stats
Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Monday, May 11, 2026

அன்பின் பொழுது.. அரசியல் மாண்பு !

 Uncleஉம் அன்புத் தம்பியும் ஆரத்தழுவிய அன்பின் பொழுது..



தீயசக்தி, தற்குறி எல்லாம் தேர்தலோடு போ..

இது மிகச்சிறந்த அரசியல் மாண்பு 👌🏻❤️
பாராட்டவேண்டிய ஓர் எடுத்துக்காட்டு.

இதற்கு முதல் தமிழ்நாட்டு அரசியலில் MGR - கலைஞருக்குப் பிறகு இப்படியான அன்னியோன்னியம் எதிரெதிர் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் இருந்ததா என்பதை தமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.

ஸ்டாலின் விஜயைக் கைபிடித்து அழைத்துச் சென்றதெல்லாம்…
அடடா

இவர்களுக்காக இரு தரப்பிலும் நின்று களமாடியவர்களுக்கு ( அதுவும் வாக்கே இல்லாமல் இங்கே நின்று காற்றில் கம்பு சுற்றியோருக்கு) எப்படியிருந்திருக்கும்ம்? 😄

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

ஆனால் உண்மையாக முதலமைச்சராக விஜய் இன்று மூத்த அரசியல் தலைவர்களைத் தானே நேரில் சென்று சந்தித்தது மிகவும் சிறப்பானது.
இது நேற்று பதவியேற்பின் பின் பெரியார் திடலில் கி.வீரமணி அவர்களைச் சந்தித்ததில் ஆரம்பித்தது.

வழமையாக பொன்னாடையை ஏற்காத சீமானே மறுப்பின்றி அன்புக்காக அதை ஏற்றுக்கொண்டார் போலும்..
அன்பே வெல்லட்டும்.

Tuesday, May 5, 2026

விஜய் வெற்றி !

 விஜய் வெற்றி !


தமிழக மக்கள் தம் தீர்ப்பை தெளிவாக வழங்கியிருக்கிறார்கள். திமுக ஆட்சி மீதான வெறுப்பும் இரு திராவிடக் கட்சிகளினதும் மாறி மாறி வந்த ஆட்சிகளின் அலுப்பும் சேர்த்து மாற்று ஒன்றைத் தேடிய வேளையில் நம்பிக்கை தரக்கூடிய புதிய தெரிவாக விஜய் வந்தார்.
தனியே திரைக் கவர்ச்சி என்று மட்டுமன்றி பொருத்தமான மாற்றுத் தெரிவாக அமைவார் என்று மக்கள் மத்தியில் ஒரு மனவுறுதியைக் கட்டியெழுப்பிய விஜய், விமர்சனங்களுக்கு மத்தியில் தன்னைக் கட்டியெழுப்பிய ஒவ்வொரு அடித்தளமும் சரியான strategyயுடன் செய்யப்பட்டவை.
எம்மிற் பலருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருந்த அவதானிகளுக்கே தெரியாமல் நிகழ்ந்துகொண்டிருந்த இந்த மிகப்பெரும் அரசியல் பூகம்பத்தை விஜய் தன் ஆழமான நகர்வுகளால் - ஆனால் உறுதியான உரைகள் (இவை கூட கேலி செய்யப்பட்டாலும் தனது இலக்குக்குரிய மக்கள் எவரோ அவர்களை சரியாக அவற்றை அடையச் செய்தது அவரது பலம்) + நடவடிக்கைகளோடு தானாக இந்த வெற்றியைக் கனிய வைத்த ஆட்சியாளரின் தவறுகளும் அடாவடி விமர்சனங்களும் கூடவே மக்களின் அனுதாபமும் சேர்ந்துகொண்டது.
ஆனால் நான் பார்த்து ஆச்சரியப்பட்டதும் ரசித்ததும் கடைசி நான்கைந்து ஆண்டுகளில் பாடல் வெளியீட்டு மேடைகளிலிருந்து தேர்தல் மேடைகள் வரை மெருகேறி வந்த அவரது உரைகளும் அதற்கான உழைப்பும்.
(social media, youth attraction, சினிமா பாணியிலான power packed பாடல்கள் எல்லாம் கோடிக்கணக்கான பலம் கொண்ட மற்றவர்களால் கூட போட்டி போட முடியாதவொன்றாக அமைந்துபோனது)
அதில் தெரிந்த உறுதியும் கூட.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பகிரங்க சவால் விடுவது விஜய் போன்ற ஒருவருக்கு இலேசானதல்ல.சினிமாத்தனமும் இயல்பை மீறிய ஹீரோயிசமும் இருந்தாலும் பல நேரம் அந்த presentation + charismaவை ரசித்தே இருந்தேன்.
ஆனால் அதற்குப் பிறகு வருகிற அழுத்தங்களையும் சமாளித்து சொன்னபடியே விட்ட பஞ்ச் வசனங்களை நடத்தியும் காட்டி 'முதல்வன்' படத்தை நிஜத்தில் நடத்திக் காண்பித்திருக்கிறார்.
(முதல்வன் படக்கதை தனக்கு அப்போது வேண்டாம் என்று நிராகரித்தும் இருந்தார் விஜய்)அவரது திரை வளர்ச்சியும் வெற்றியும் போலவே கடைசி சில ஆண்டுகளின் கட்டமைப்புக்களும் நேர்த்தியான திரைக்கதை தான்.
இதெல்லாம் காகம் இருந்து பனம் பழம் விழுந்த கதை அல்ல.கண்முன்னே நிகழ்ந்த ஓர் அரசியல் அற்புதம்.
மிகப்பெரிய முயற்சியும் முதலீடும் இதன் பின்னால் இருந்ததோடு வலி தாங்கி, விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் உழைப்பை வழங்கக்கூடிய திடமும் அதற்கேற்ற அணியும் இருந்திருக்கவேண்டும்.
விஜய், தவெகவின் கொள்கைகள், கட்டுப்பாடில்லாத அவர்களது தொண்டர்கள், ரசிகர்கள், வெறியர்கள், அவர்களது நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்கள் இருக்கின்றன தான்.
ஆனால் இந்த வெற்றியும் அதற்கான scheming + strategies & இன்றைய வெற்றியின் சாதனைகள் ஆகியன மெச்சிப் பாராட்டவும், முடிந்தால் பின்பற்றவும் படவேண்டியவை.
ரசிகர்களுக்கான தளபதியாக இருந்து இனி மக்களுக்கான (தனக்கு வாக்களிக்காத 3 கோடி பேருக்கும் சேர்த்தே) தலைவனாக புது வழி காட்டுவதற்கும் சேர்த்து மனமார்ந்த வாழ்த்துகள் விஜய்.
பெரிய சவாலைக் கடந்த உங்களுக்கு இனி 118ஐ அடைவதும் அதற்குப் பின் உங்கள் ரசிகர்களை உங்கள் மக்கள் சேவைக்கும் உங்கள் அன்றாடப் பயணங்களுக்கும் மக்களைச் சந்திக்கும்போதும் பழக்கப்படுத்தி ஒழுக்கப்படுத்துவதும் தான் அதை விடப் பெருஞ்சவாலாக அமையப்போகிறது (இன்றும் அவரது வாகனத்துக்கு முன்னால் வந்து குதித்து வீழ்ந்து அன்பைக் காட்ட முற்பட்டோர் தந்த சங்கடத்தை முகத்தில் காட்டாமல் மறைத்த விஜயைப் பார்க்க பாவமாக இருந்தது) என்பது தெளிவு.
எவ்வளவோ பண்ணிட்டீங்க...
நல்லதே நடக்கட்டும் 🙏🏻👏

Sunday, April 12, 2026

ஜனநாயகன் Leak !

 தமிழ்நாட்டிலுள்ள என் நண்பர், அவர் ஒரு விஜய் ரசிகர்.

ஜனநாயகன் லீக் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.



யார் இதைக் கசிய விட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், இது கசிவெல்லாம் இல்லை, முழுமையான தரமான HD தரத்தில் unofficial releaseஏ ஆகியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டவர், இதன் மூலமாக யாருக்கு இலாபம் என்ற விடயத்தில் எதிரிகள் அப்படி செய்திருந்தால் தமக்கே குழி தோண்டிவிட்டார்கள் என்றார்.
தனக்குக் கிடைத்த linkஇல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டதாகச் சொன்னார்.
அடப்பாவி அப்போ தியேட்டரில் பார்க்கும் விஜய் ரசிகரின் வைராக்கியம் என்னவாச்சு என்று கேட்டேன்..
TVK Tattoo எல்லாம் போட்டு தேர்தலுக்கான பிரசாரப்படத்தை தேர்தல் முடிஞ்சபிறகு திரையில் பார்த்து யாருக்கு என்ன பயன் என்று எனக்கு பதில் கேள்வி போட்டார். ம்ம்ம் சரி தான் !
"கோடிகளை விட்டிட்டு மக்களுக்காக வந்திருக்கிற நம்மாள் இன்னும் பல கோடிகளைக் கொட்டி தனக்கு வாக்குக் கேட்டு ஒரு High Budget பிரசாரப் படம் எடுத்திருக்காரு ப்ரோ. இப்ப தான் அதைப் பார்க்கணும்" என்று தெளிவாக சொல்லிட்டார்.
படம் எப்படி என்று கேட்டேன்.
"H.வினோத் என்றால் அவரது முதல் இரண்டு படம் தான் ப்ரோ, தளபதி விஜய் என்று வந்தால் அவரது கடைசி இரண்டு படங்களை மறந்திடணும் ப்ரோ"
Okay !

Wednesday, March 26, 2014

ஒரு சுடர் இரு சுடர் - ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே



அஜித் - விஜய் இணைந்து நடித்த ஒரே படம் என்பதைத் தாண்டி வேறெந்த முக்கியத்துவமோ வரலாறோ இல்லாத படம்.

ஆனால் முத்து முத்தான பாடல்கள்.
முக்கியமாக மூன்று பாடல்கள்.

இளையராஜாவின் மும்முரமான பணிகளில் அருண்மொழி இசைப் பணிகளை மேற்பார்வை பார்த்து, பின்னணி இசையும் வழங்கிய படம்.
(கானா பிரபா அண்ணரின் வானொலிப் பேட்டியில் அருண்மொழியே சொல்லியிருந்தார்)

இந்தப்படத்தில் எப்போதும் எனக்குப் பிடித்த அருண்மொழி பாடிய அம்மா பாடல் "அம்மன் கோவில் எல்லாமே" எப்போதுமே மனதுக்கு மிக நெருக்கமானது..

இன்னொரு அருண்மொழி பாடிய பாடல், இவள் யாரோ வான் விட்டு என்று ஆரம்பிக்கும் பாடல்.. (இன்னொரு நாள் பொற்காலப் புதனுக்காக வைத்துள்ளேன்)

இன்னொரு பாடல் இன்று காலையில் ஒலிபரப்பியிருந்தேன்.

ராஜாவின் பார்வையிலே - ஒரு சுடர் இரு சுடர்...

சூரியன் இசைக் களஞ்சியத்தில் காணாமல் போயிருந்த பாடலைத் தேடியெடுத்து ஒலிபரப்பும் வாய்ப்பு பொற்காலப் புதன் மூலம் கிடைத்திருந்தது.

மனோ, ஜானகியுடன் கோரஸ் பாடியுள்ளோரின் குரலிசையும் இனிய அனுபவம் தரக்கூடியது.

இளையராஜா டச்சைத் தாண்டி ஸ்பெஷலாக இந்தப் பாடலில் அருண்மொழி துருத்தித் தெரிகிறாரோ என்று ஒரு ஐயம்.
(பாடலின் இசை மேற்பார்வையும் இசைக் கோர்ப்பும் அருண்மொழி தானா ? அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நாட்டுப்புறப் பாட்டு படத்திலும் உள்ள பாடல்களைக் கேட்கும்போதும் இதே உணர்வு. அந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பும் நம்ம அருண்மொழி தான்)

பாடலின் ஜாதி போடும் இசைக்கோலம், வரிகளின் ஜாலம், அதுபோல மனோ சிற்பியின் வருகையின் பின்னர் மாறிய குரலோடு இல்லாமல், அதற்கு முன் பாடிய தன் இயல்பான குரலில் காதல் வழிந்தோடும் குரலில் பாடியிருப்பது சுகம்.
ஜானகி அம்மையார் குழைகிற இடங்களும் ரசனையுடன் இன்னொரு இசைக் கருவி மீட்டுவது போலவே இருக்கும்.

இதெல்லாவற்றையும் விட இந்தப் பாடலில் முக்கிய பாடக, பாடகியரை விட கோரஸ் பாடகியர்க்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும்.
பாடலின் ஆரம்பத்தில் ஜானகி பாட முதலே கோரஸ் குரல்கள் பாடலை நகர்த்திச் செல்லும் நயமும், பாடல் முழுவதும் கோரஸ் ஒலிகள் பாடலுக்கு தனி வர்ணம் கொடுப்பதும் புதுமை.

அவதாரம் படத்தில் இதே மாதிரி தென்றல் வந்து தீண்டும் போது பாடலில் இசைஞானி விளையாடி இருப்பார்.
எஜமான் பட - ஒரு நாளும் உன்னை மறவாத, ஆலைப்போல் வேலைப் போல்
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - வந்தாள்வந்தால் ராஜகுமாரி பாடல்கள் உடனே ஞாபகம் வந்த மேலும் சில உதாரணங்கள்.

கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்...

அட பாருங்கள் என்னும்போது தான் விஜய் பற்றியும் சொல்லவேண்டி இருக்கிறது.
காதல் படங்களைத் தேர்ந்து நடிக்கும் காலத்தில் (பூவே உனக்காக, லவ் டுடே) இவருக்கான அடையாளமாக இருந்த அந்த அசைவும், நளினமான நடனமும் இந்தப் பாடலிலும் பாருங்கள்.

இந்திரஜா, இவர் தான் பின்னர் மின்சாரக் கண்ணாவிலும் விஜய்யோடு ஜோடி சேர்ந்தவர்.




ரசனையான இந்தப்பாடலை இன்று கேட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு பாடலும் ஞாபகம் வர, அந்தப் பாடலின் ஆரம்ப இசையை ஒரு சில வினாடிகள் ஒலிபரப்பிக் காட்டியிருந்தேன்...



இரண்டுமே இசைஞானியின் இசை தான்..
மலைக்கோவில் ரஜினியால் பிரபலமாகிப் போனது.

ஆனால் இரண்டு பாடல்களுமே கேட்க கேட்க சுகம் தான்.