Wednesday, December 12, 2012

ரஜினி 63 @ 12-12-12 12:12 - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 2

அபூர்வ ராகங்களில் ஆரம்பித்து அதிரடி மன்னனாக மாறி, அறுபத்து மூன்றிலும் அயராது திரைப்பயணம் சென்று கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

திரையில் எவ்வளவுக்கெவ்வளவு தனது ஸ்டைலினால் அன்று முதல் இன்று வரை வயது வித்தியாசமில்லாமல் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளாரோ, அதேபோல ரஜினி திரைக்கு வெளியே தனது எளிமையினாலும், இயல்பான நடத்தைகளாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை வசப்படுத்தியிருகிறார்.

அனைவரும் இவருக்கு நண்பர்களே.. 
இதோ பாருங்கள்.... தனது திரையுலக வாழ்க்கையில் ரஜினியின் நண்பர்களை..

ரஜினிகாந்துடன் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு நட்சத்திரங்களும், பெரும் புள்ளிகளும் சேர்ந்து நிற்கும் காலம் கடந்த புகைப்படங்கள்.


பழசை மறக்காத ரஜினி.. நண்பர்களுடன்...


அறிமுகப்படுத்திய குருநாதருடனும் நேரடிப் போட்டியாளரும், நண்பருமான கமலுடனும் 


இல்லறத் துணையை இணைத்துக்கொண்டபோது 


ரஜினி - லதாவை வாழ்த்தும் கமல் -வாணி கணபதி 


 நடிகர் திலகத்துடன்......


அதிக படங்களில் சேர்ந்து நடித்த ஆத்ம நண்பருடன்...
ரஜினியின் வார்த்தைகளில் சொல்வதானால் "திரையுலக அண்ணா"


புரட்சித் தலைவரிடம் விருது வாங்கும் பெருமிதம்...


முள்ளும் மலரும் படப்பிடிப்பில். இயக்குனர் மகேந்திரன், நடிகர் சரத் பாபுவுடன்..


இன்னொரு இனிய நண்பர் இசைஞானியுடன் ஒரு இனிய பொழுதில்...


சப்பாணியும் பரட்டையும்.... 16 வயதினிலே..
"இது எப்பிடி இருக்கு?"


 கலைஞர் கருணாநிதியுடனும் திரைக் கலைஞர் குடும்பத்துடனும்
சந்திரமுகி பட வெற்றிவிழாவில்.. வீரவாள் ஏந்தும் ரஜினி....


எண்பதுகள், தொண்ணூறுகளின் நான்கு நட்சத்திர நாயகர்கள்....
விஜயகாந்த்,கமல்ஹாசன்,ரஜினிகாந்த் & சத்யராஜ்


முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன்...


மூத்த மகளின் திருமணத்தில் இப்போதைய தமிழகப் பிரதமர் ஜெயலலிதாவுடன்....


இரண்டு சூப்பர் ஸ்டார்கள்...
அமிதாப்பும் ரஜினியும்.... 


சிரஞ்சீவியுடனும் கமலுடனும் 


தளபதி படப்பிடிப்பில் மணிரத்னம் - ஓம் பூரியுடன்


ஆந்திராவின் நாயகர்களுடன்.. 


அமீர் கானுடன் ஆசையோடு...


பாரதப் பிரதமருடன் பவ்யமாக 


எத்தனை தரம் சந்தித்தாலும் "நினைத்தாலும் இனிக்கும்" & "இளமை ஊஞ்சலாடுகிறது" இருவருக்கும்...


லகானுக்கு  பாசத்தோடு வாழ்த்து...


உலகக் கிண்ண இறுதிப் போட்டியின்போது - இந்திய அணியின் ராசியாக ? :)


நட்சத்திர அணிவகுப்பு...
கே.பாலாஜி, கமல், ஜெய்சங்கர், ரஜினி, விஜயகுமாருடன் 


ஆந்திரப் படவுலக விழாவில்... நட்சத்திரங்கள் & அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் 


 எண்பதுகள், தொண்ணூறுகளின் நட்சத்திரங்கள் சந்தித்த ஒரு நல்ல பொழுதில்.... நாயகராக ரஜினி...

அதிக படங்களின் நாயகியான என்றும் அழகி ஸ்ரீதேவியுடன்....இசைப்புயலுடனும், கொலைவெறி புகழ், உறவுக்காரப் பையன் அனிருத்துடனும்...

இசைஞானியை மகிழ்வுற வைக்க ஒரு விசில்...


அஜித்-ஷாலினி திருமண நிகழ்வில் தம்பதி சமேதராக..


தனுஷ் மருமகனாக்கிய ரஜினி குடும்பத்தின் முதலாவது திருமண நிகழ்வில்....படங்களைப் பல்வேறு இடங்களில் சுட்டு எடுத்துள்ளேன்....
அவற்றை இணையம் ஏற்றி எனக்கும் உதவியிருந்த இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் நலன்விரும்பி நட்புக்களுக்கு நன்றிகள்.

ரகம் ரகமாக ரஜினி - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 1


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 63வது பிறந்தநாளுக்காக இணையத்தில் தேடி, சுட்டு எடுத்த அவரது வித்தியாசமான தோற்றங்கள்... 

பொதுவாகவே சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்துக்குள் சிக்கிய பிறகு ஒரே மாதிரியான கதைகள், ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் என்று ரஜினி அரைத்த மாவையே மசாலாக்களை மட்டும் சற்று மாற்றி மாற்றி அரைக்கிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருபவர் ரஜினி .

ஆனால் இந்தப் படங்களைப் பாருங்கள்... 

சிக்கிக்கொண்ட வட்டத்துக்குள்ளே இருந்துகொண்டே ரசிகர்களையும் இழக்காமல், தயாரிப்பாளர்களையும் நொடிக்காமல் தன்னால் முடிந்தளவு பாத்திரங்களில் கொஞ்சம் வித்தியாசம் (கொஞ்சமாக இருந்தாலும்) சில மாற்றங்களைக் காட்டி வந்துள்ளார் இந்த ஸ்டைல் காந்தம்.....

இமயமலை தேடி இளைப்பாறும் அறுபத்து மூன்று வயது இளைஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....படங்களைப் பல்வேறு இடங்களில் சுட்டு எடுத்துள்ளேன்....
அவற்றை இணையம் ஏற்றி எனக்கும் உதவியிருந்த இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் நலன்விரும்பி நட்புக்களுக்கு நன்றிகள்.