Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts

Friday, June 24, 2011

சண்டிகாரில் க்ளிக் க்ளிக் - பாறைப் பூங்காவும், படங்களும்

சண்டிகார் பாறை/கல் பூங்காவில் (Chandigarh Rock Gardenசில கிளிக்குகள்.....



உலகக்கிண்ண அரையிறுதி (இந்தியா vs பாகிஸ்தான்) பார்த்த அடுத்த நாள் சண்டிகாரில் ரவுண்ட்ஸ் போனபோது அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பாறை/கல் பூங்காவுக்கு சென்று இருந்தோம்..

கற்களால் ஆன சிலைகள், கழிவுப் பொருட்களால் ஆன கலைப்படைப்புகள் மட்டுமல்ல, இன்னும் காதலர் பூங்காவும் வேறு...
பெரிய தொகையான கட்டட, தொழிற்சாலை, வீட்டு கழிவுப் பொருட்களை சேர்த்து ஒரு கலைக்கூடமாக மாற்றியுள்ள ரசனையும் அழகும் எங்களின் நான்கு மணிநேரப் பொழுதுகளை அங்கே செலவிடச் செய்திருந்தது.
 
அங்கே எடுத்த சில சுவாரஸ்யமான கிளிக்குகள்.

கல்லுக்கு முன்னால் கலைஞன் ;) 

நேக் சந்த் என்பவரது கற்பனையில் உருவாக்கப்பட்ட இந்த கல் பூங்கா, இந்திய மக்களின் படைப்புத்திறனுக்கு சமர்ப்பணம் என்ற வாசகங்கள்.
1988ஆம் ஆண்டு July மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கழிவுப் பொருட்கள், உடைந்த மாபிள்களால் உருவாக்கப்பட்ட கலை சிற்பங்களுடன் நண்பர் விமல் 

அடுக்கப்பட்ட பானைகளும் அருகே நானும் 

                                                 நிழலிலும் கலையழகு.. 
தெரிவது பானைகளாலான கோபுரம்..  

அந்தக் கால அரசர்களின் நீச்சல் தடாகத்தின் முன்னால் ...

ஒரு சுவாரஸ்ய சுரங்கப்பாதை 

செயற்கையாக ஒரு குகைக் கூடம்

உடைந்த சிலைகளின் கற்களால் ஒரு அரண் 

நீர்வீழ்ச்சியுடன் ஒரு அழகான அரண்மனை முகப்பு.. 
குளுமையும் அழகும்..

இந்த அரண்மனையை மட்டும் நம்ம சினிமாக்காரங்க இன்னும் பார்க்கலையோ?
இல்லாவிட்டால் இங்கே எடுத்த பாடல்காட்சிகளை நான் பார்க்கலையோ?

ஷூட்டிங் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு போட்டோவாவது ஷூட் பண்ணிக்கிறேனே..

கோடுகளும் கோலங்களும் கோபுரங்களில் கலைவடிவங்களாகின்றன..

இயற்கையையும் இணைக்கின்ற செயற்கை கலைக்கூடம்..
மரங்களின் விழுதுகளும் கோட்டையின் சுவர்களோடு..

படிகளில் ஏறியபின் தான் யோசிக்கவேண்டி இருக்கிறது..
மீண்டும் இறங்கவேண்டுமா என்று..

சாய்ந்தாலும் கோட்டைச்சுவரில் தான்..

பல்லவர் காலமும் கொஞ்சம் ஞாபகம் வருகிறதா?

ஒரு அகழியும் சுரங்கமும்.. 
அரண்மனைஎன்றால் இவை இல்லாமலா?

படிக்கட்டிலும் பல வடிவங்கள்..

வளைந்தும் நெளிந்தும் மேலும் கீழும் நீளும்
படிகள்.. 

செயற்கை அரண்மனையும் கூட ஆளும் ஆசையைத் தந்துவிடுகிறது..
கோட்டை கொத்தளங்களும், தடாகமும் தண்ணீரும்..

இந்த நீர் வீழ்ச்சி கூட உருவாக்கியது தானாம்.. 
இயற்கையை சில நேரங்களில் ஜெயிக்கிறான் மனிதன்.

காதலருக்கு இதம்..
கலை ரசிகருக்கு இனிமை....
அழகுக்குக் குறைவில்லை..

இது என்னவாக இருக்கும்? 
ஏறி நின்று யோசித்தாலும் ஊகிக்க முடியவில்லை 

வருங்கால முதலீட்டுக்கு இப்போதே ஒத்திகை ;)

சிறைச்சாலை எனது சிந்தனைக்கூடம் என்கிறாரோ?

வளைந்து நெளியும் பாதை..
அழகு மங்கையரின் அந்தப்புரத்துக்கு எம்மை அழைத்துச் செல்கிறதாம்...

அழகிகள் நீராடும் இடம் இப்படித்தான் இருக்குமாம்..
இது யாருக்கு வேண்டும்? அழகிகள் எங்கே?

கிணறு.. 
பழைய விஷயங்கள் மறந்து போகாமல்..

கிணறு காட்டுகிறேன் பாருங்கள்..

உடைந்த பொருட்களால் என்றோ ஒரு நாள் உடைந்து போகும் மனிதர்கள்..

இன்னொரு பக்க நீர்வீழ்ச்சி..
விழுவது இங்கே மட்டும் தான் அழகு..

உச்சத்தில் ஒரு கோபுரத்துடன் சில உருவச் சிலைகளுடன்
இமயத்தை ஞாபகப்படுத்துகிறதாம்..

இதோ கண்டோம் சிவனை..

திறந்தவெளிக் கலையரங்கின் ஒரு பக்கம்..

இந்தியனில் கவுண்டரைக் கடித்தவரும் இங்கே உலவுகிறார்..
உலாவும் போய்வரலாம் ஒட்டகத்தில் ஏறி..

அரங்கின் பார்வையாளர் அமரும் பகுதி..
இவையும் கழிவுப் பொருட்களால் தான் கட்டப்பட்டவை..
கழிவுகளும் கலைகளாகியுள்ளன இங்கே.. 

ஊஞ்சல்..
வரிசையாகப் பல..
சிறுவர் முதல் ஜோடிக் காதலர், இளமை தொலைத்த முதியவர்கள் அனைவருக்கும்
ஊஞ்சல்கள் இங்கேயுண்டு..


புற்றரையுடன் பூங்கா..
காதலருக்கு மட்டும் என்றில்லை..

ஒட்டகத்தை உயிருடன் கண்டோம்.. 
இங்கே குதிரைகள் சிலைகளாக..

கழிவுப் பொருட்களையெல்லாம் இப்படி இவங்க மாற்றி இருக்காங்களே..
நம்ம நாட்டிலையும் இது நடக்குமா?

இவ்வளவு கஷ்டப்பட்டு படம் பிடிச்சு, பதிவாயும் போட்டிருக்கேனே 
பார்ப்பாங்களா?
கலைவடிவங்களுக்கு திருஷ்டி கழிக்கத்தான் நம்ம இரண்டு பேரின் படங்களையும் போட்டிருக்கோம் என்று கண்டுபிடிச்சிருப்பாங்களோ?

எவ்வளவு பார்த்திட்டாங்க.. இதையும் பார்த்து சகிக்க மாட்டாங்களா?