Thursday, November 11, 2010

தீனா சுட்ட முருகன் பாடல்..

அண்மையில் வெளிவந்து அனைவரது காதுகளையும் ரம்மியமாக்கி இருக்கும் வல்லக்கோட்டை திரைப்படப் பாடல் 'செம்மொழியே செம்மொழியே' (கலைஞர் எழுதி,இசைப் புயலின் இசையில் வந்த செம்மொழியே பாடல் அல்ல..)
கவிஞர் தபூஷங்கர் எழுதிய அழகான வரிகளை தமிழ்த் திரையுலகின் அற்புத ஜோடி,காலத்தை வென்ற குரல்வளம் கொண்ட S.P.பாலசுப்ரமணியம்+S.ஜானகி பாட தீனா இசை அமைத்துள்ளார்.


ஆனால் கொடுமை இறுவட்டில்,வானொலியில் கேட்ட ஜானகி குரலைத் திரைப்படத்தில் கேட்கமுடியவில்லை. வேறு யாரோ ஒரு பாடகியை வைத்து பாட வைத்துள்ளார்கள்.
இன்றும் இளமை ததும்பும் ஜானகி அம்மையாருக்கு மரியாதை தரவாவது திரையிலும் அவர் குரலையே பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கலாம்.

அற்புதமான காதல் வரிகளைத் தந்த தபூஷங்கரையும் பாடல் காட்சி காயப்படுத்தி இருக்கும்.
மென்மையான வரிகள் கொண்ட பாடல் திரையில் அள்ளித் தருவதோ கவர்ச்சிக் காட்சியை.
பாடலைக் கேட்டீர்களா? 
இணையமெங்கும் தேடியும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க காட்சியுடன் பாடல் கிடைக்கவில்லை.
(அதற்காக இந்தப் பாடலுக்காக வல்லக்கோட்டை பார்த்து இரண்டரை மணி நேரத்தையும் உங்கள் பணத்தையும் வீணாக்காதீர்கள்)

பிற்சேர்க்கை - காட்சியுடன் பாடல் - கவர்ச்சி விருந்தும் சேர்ந்து

தீனாவின் மெட்டமைப்பையும் இசையமைப்பையும் நீங்கள் மெச்சி இருந்தால் அடுத்த பாடலைக் கீழே கேட்டு விட்டு ஒன்றில் உங்களை நீங்களே நொந்துகொள்வீர்கள்.. இல்லையேல் தீனாவை மனதுக்குள் நீங்கள் அறிந்த கெட்ட வார்த்தைகளால் வைது தீர்ப்பீர்கள்..
இந்த முருக பக்திப்பாடல் T.M.சௌந்தரராஜன் பாடியது.
இசையமைத்தவர் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன்.

எப்படியெல்லாம் உருவி,உல்டா செய்கிறார்கள் பாருங்கள்..

தேவா கந்தர் சஷ்டி கவசத்தை உல்டா செய்து பதினெட்டு வயது (சூரியன் படப் பாடல்) பாடலாக்கினார்.
இப்போது தீனா இன்னொரு பிரபல முருகன் பாடலை உல்டா ஆக்கியுள்ளார்.

இன்று இந்துக்களின் கந்தர் சஷ்டி விரதத்தின் இறுதி நாள்..
அதற்கான சிறப்புப் பதிவாக பக்த கோடிகள் நினைத்துக்கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

நேற்று வல்லக்கோட்டை (நொந்து,வெந்து) பார்த்த பிறகு மனதில் தோன்றிய பதிவு இது..


செம்மொழி என்று ஆரம்பித்தாலே சர்ச்சை தானா? 
  ஒரு வேளை முருகன் தமிழ்க் கடவுள் என்பதனால் துணிச்சலோடும் உரிமையோடும் முருகன் பாடல்களை சினிமாவுக்குள் எடுக்கிறார்களோ???

Tuesday, October 19, 2010

ஆயுத பூஜை - எந்திரன் ஸ்டைல் !!!!!

ஆயுத பூஜை - எந்திரன் ஸ்டைல்  !!!!!


ஆயுத பூஜையன்று எனக்கு வந்திருந்த வித்தியாசமான வாழ்த்து...
எப்பிடியெல்லாம் ஆயுத பூஜை கொண்டாடுறாங்கப்பா..

எனக்கு அனுப்பி வைத்திருந்தவர் கட்டாரிலுள்ள என் தம்பி செந்தூரன் - ரஜினி ரசிகன் :)

Thursday, August 5, 2010

எந்திரன் - ரஜினியின் டூப்பு

எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கான டூப்பாக சண்டைக் காட்சிகளில் அதகளப்படுத்தியிருக்கும் அலெக்ஸ் மார்ட்டினின் (Alex Martin) சாகசங்கள்.

ரஜினியின் முகமூடியணிந்து எந்திரனாக சுழன்று அடிக்கப் போகின்றவர் இவரே..பார்க்கும்போது பிரமிப்பும் பெருமூச்சும் சேர்ந்தே வருகிறது..
சண்டையும் சாகசமும் காட்டுவது யாரோ..
ஹீரோ யாரோ..

கஷ்டப்படுபவன் யாரோ.. கரகோஷம் யாருக்கோ..

ஆனால் இது தான் சினிமா.. :)
லூஸ்ல விடுவோம்.. படத்தை எதிர்பார்ப்போம்..

Monday, June 21, 2010

நான் வருவேன் - ராவணன்

நான் வருவேன் - ராவணன் 


வைரமுத்து எழுதி A.R.ரஹ்மான் இசையமைத்து பாடிய பாடல்..
படத்தின் இறுதியில் வந்து உயிர் உருக்கும் பாடல்..

பலர் இதை மணிரத்னம் எழுதியதாக சொன்னாலும் அது தவறு.
உரையாடலைக் கவனியுங்கள்..
'வீரா' பாடல் மட்டுமே வைரமுத்து எழுதாதது..

வைரமுத்துவின் குரலில் கவிதையை ரசியுங்கள்.. பின்னர் பாடலின் இனிமையை ரசியுங்கள்.


யாராவது முழுமையாகப் பாடலைத் தரவேற்றினால் சுட்டியை அனுப்பி வையுங்கள்.. 
நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..


பிற்சேர்க்கை...

இசைப்புயல் A.R.ரஹ்மான் முதல் தடவையாகத் தோன்றியுள்ள பாடல் காட்சியாக ரசிகர்கள் மனதை மீண்டும் தொட்டுள்ளது 'நான் வருவேன்'....
படத்தில் வந்த இந்தப் பாடலை விட இசைப்புயல் தோன்றியுள்ள, அவரோடு ஐஸ்வர்யாவும் தோன்றியுள்ள இந்தக் காணொளி அதிகம் ஈர்ப்பு.....


Tuesday, June 1, 2010

சூர்யா ரசிகராம் மரடோனா..

சூர்யா ரசிகராம் மரடோனா..


பாருங்கப்பா.. சிங்கம் பட சூர்யா கெட் அப்பில் இந்த ஆர்ஜெண்டீன கால்பந்து சிங்கத்தை..
மீசை தாடி நரைச்சாலும் சிங்கம் சிங்கம் தான்..Monday, May 31, 2010

இன்று ரிலீஸ் - இலங்கையின் எந்திரன் !!!!

இன்று ரிலீஸ் - இலங்கையின் எந்திரன் !!!!

இன்று மாலை முதல் 'லோஷனின் களத்தில்'

Monday, February 22, 2010

சொகுசு&சுகம் = ஷோயிப்

83000 டொலர்கள் தண்டப்பணம் செலுத்திய கவலை கொஞ்சமாவது தெரியுதா பாருங்கள்..
பாடசாலை குஜிலிகளோடு குஷாலாக ஷோயிப் அக்தார்..