View My Stats

Sunday, April 12, 2026

ஜனநாயகன் Leak !

 தமிழ்நாட்டிலுள்ள என் நண்பர், அவர் ஒரு விஜய் ரசிகர்.

ஜனநாயகன் லீக் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.



யார் இதைக் கசிய விட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், இது கசிவெல்லாம் இல்லை, முழுமையான தரமான HD தரத்தில் unofficial releaseஏ ஆகியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டவர், இதன் மூலமாக யாருக்கு இலாபம் என்ற விடயத்தில் எதிரிகள் அப்படி செய்திருந்தால் தமக்கே குழி தோண்டிவிட்டார்கள் என்றார்.
தனக்குக் கிடைத்த linkஇல் முழுப்படத்தையும் பார்த்துவிட்டதாகச் சொன்னார்.
அடப்பாவி அப்போ தியேட்டரில் பார்க்கும் விஜய் ரசிகரின் வைராக்கியம் என்னவாச்சு என்று கேட்டேன்..
TVK Tattoo எல்லாம் போட்டு தேர்தலுக்கான பிரசாரப்படத்தை தேர்தல் முடிஞ்சபிறகு திரையில் பார்த்து யாருக்கு என்ன பயன் என்று எனக்கு பதில் கேள்வி போட்டார். ம்ம்ம் சரி தான் !
"கோடிகளை விட்டிட்டு மக்களுக்காக வந்திருக்கிற நம்மாள் இன்னும் பல கோடிகளைக் கொட்டி தனக்கு வாக்குக் கேட்டு ஒரு High Budget பிரசாரப் படம் எடுத்திருக்காரு ப்ரோ. இப்ப தான் அதைப் பார்க்கணும்" என்று தெளிவாக சொல்லிட்டார்.
படம் எப்படி என்று கேட்டேன்.
"H.வினோத் என்றால் அவரது முதல் இரண்டு படம் தான் ப்ரோ, தளபதி விஜய் என்று வந்தால் அவரது கடைசி இரண்டு படங்களை மறந்திடணும் ப்ரோ"
Okay !

Thursday, March 30, 2017

நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai


வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இல்லை..
முல்லை கொல்லை நீ நல்லை அல்லை
நல்லை என்றவுடன் நல்லூர் எவ்வளவு ஞாபகம் வருகிறதோ, அல்லை என்றவுடன் யுத்தகாலத்தில் அடிக்கடி கேட்ட, வாசித்த அல்லைப்பிட்டியும் மனதில் நினைவுக்கு வந்துவிடும்.
ஆனால், //நன்னிலவே நீ நல்லை இல்லை// என்று நீ நல்ல நிலவு தான் ஆனாலும் நல்லவள் இல்லை என்று வர்ணிக்கும் தமிழின் செறிவும் துணிவும் ரசனையின் உச்சம்.

நல்லை அல்லை.. மீண்டும் மீண்டும் ரசிக்க ரசிக்க ....
என்றோ படித்த திருநாவுக்கரசரின் திருவொற்றியூர் திருத்தாண்டகம் ஞாபகம் வந்தது.
தற்போது மிக அரிதாக (அல்லது அறவே இல்லாத)அறு சீரடி, எண் சீரடியில் சந்தச்சுவை, தமிழின் இனிமை உணர்த்தும் தாண்டக வகைச் செய்யுள்களின் அருமையையும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய 'காற்று வெளியிடை'க்கும் வைரமுத்துவுக்கும் நன்றி..
திருஒற்றியூர் - திருத்தாண்டகம்
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.

(மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை;
கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு
அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது
அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய
ஒற்றியூர் உடைய கோவே!.)
உரை - எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே. நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தையாயும் உள்ளாய்.

இதே நல்லை அல்லை சொல்லாடல் குறுந்தொகையிலும் கையாளப்படுள்ளதை வாசித்தறிந்தேன்..

“நல்லை அல்லை” சொல்லாடல் குறுந்தொகையின் 47வது பாடலில் இடம் பெற்றுள்ள ஒன்று. நெடுவெண்ணிலவினார் என்ற பெயரில் உள்ள கவிஞரால் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள இக்கவிதை, தோழிக் கூற்றாக அமைந்தது.
“கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.”
என்பது குறுந்தொகை 47வது பாடல்.
“நீண்ட நேரம் வானில் காயும் வெண்ணிலவே! கரிய அடியுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்த குண்டுக்கல், பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும். காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.” இதுவே அப்பாடலின் பொருள்.

Friday, April 29, 2016

தேவதையா சூனியக்காரியா? முடிவெடுங்கள்...


நண்பர் ஒருவர் பகிர்ந்த கதையை இன்றைய வெள்ளி சூரிய ராகங்களில் பகிர்ந்துகொண்டேன்.

ஒரு பெண் இளவரசியாவதும் சூனியக்காரி ஆகுவதும் உங்கள் கரங்களில் தான்..
எப்படி?
கேட்டுப் பாருங்கள்..

முன்னைய சூரிய ராகங்கள் நிகழ்ச்சியின் பகுதிகளும் எனது யூடியூப் வீடியோக்களாகப் பகிரப்பட்டுள்ளன.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, March 16, 2016

நாக்பூரில் நியூ சீலாந்து சுழல் சுனாமியில் சிக்கிய இந்தியா - தெறித்து விழுந்த மீம்கள்

இந்தியா 79க்கு சுருண்டு போய் நியூ சீலாந்துக்கு எதிராகத் தோற்ற நிமிடத்திலிருந்து உலகின் பல்வேறு கிரிக்கெட் மூலைகளிலிருந்தும் கொட்டித் தெறித்து விழுந்து வரும் மீம்கள்.

ஒரு தோல்வியினால் இத்தனை நகைச்சுவைகளை உருவாக்க முடியுமென்றால் இன்னும் பல தோல்விகளைப் பார்த்து ரசிக்கலாமே ;)

நிச்சயமாக இவற்றைப் பார்த்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகப் போவது உறுதி...

உருவாக்கியவர்களின் படைப்பாற்றலுக்கு வாழ்த்துக்கள்.
எங்கே இருந்து தான் சிந்திக்கிறார்களோ? எல்லாம் வேற வேற லெவல்.

இவற்றில் இல்லாத, நீங்கள் கண்டு ரசித்த வேறு மீம்கள் இருந்தால் பின்னூட்டங்களாக அனுப்பி வையுங்கள்..
சேர்ந்து சிரிப்போம் :)
























Wednesday, October 7, 2015

நீயே உனக்கு ராஜா - தூங்காவனம் - உலக நாயகனுக்காக கவிப்பேரரசுவின் தீப்பொறி வரிகள்

திரைப்படம் : தூங்காவனம்
பாடலை எழுதியவர் : கவிப்பேரரசு வைரமுத்து 
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : 'பத்மஸ்ரீ' கமல்ஹாசன், ஐஸ்வர்யா, யாசீன் நிசார்





நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை 
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல்வேளையில் கடல் தூங்குமா?
அதுபோல் இவன் தூங்காவனம் 

எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே..
முன்னேற்றம் உனதே நண்பா 
எந்தத் துக்கமும் உனக்குத் தடையே இல்லையே 
எல்லாமே வெற்றியே நண்பா 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா


வேலை வீசியே, வாளை ஏந்தியே 
வெளிச்சத்தை யாரும் கொல்ல முடியாது...
ஜீவஜோதியாய் நீயும் மாறினால் 
அழிவே கிடையாது...

உன் கொள்கை நெஞ்சம் 
அது தூங்காவனம் 


தோல்வி என்பதே ஞானவெற்றி தான் 
துணிந்தால் கடல்களும் தொடையளவே 
உள்ளம் என்பது என்ன நீளமோ 
அதுதான் உனதளவே 
உன் துள்ளும் உள்ளம் 
அது தூங்காவனம் 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை 
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல்வேளையில் கடல் தூங்குமா?
அதுபோல் இவன் தூங்காவனம் 

எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே..
முன்னேற்றம் உனதே நண்பா 
எந்தத் துக்கமும் உனக்குத் தடையே இல்லையே 
எல்லாமே வெற்றியே நண்பா 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

-----------------------------------

நீயே உனக்கு ராஜா பாடல் படமாக்கப்படும் விதம்...
தூங்காவனத்தின் தீப்பொறி பறக்கும் - நீயே உனக்கு ராஜா பாடல் | Neeye Unakku Raja Official Making Video






உலக நாயகன் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' - விறுவிறுப்பான புதிய Thoongaavanam - Official Trailer - 1