Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Thursday, February 17, 2011

Warm Up Clicks - கிரிக்கெட் க்ளிக்குகள்

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டி பார்க்க சென்றிருந்த போது க்ளிக்கிய சில படங்கள்

பந்துவீசத் தயாராகும் முரளி...


ஊடகவியலாளர் பகுதியின் கண்ணாடி அறைகளினூடு மைதானம் 


அரங்கத்தின் அறிவித்தல் பலகைகளில் அழகு தமிழும் உண்டு 


ஸ்கோர் போர்ட் - பழமையினை நினைவூட்டும் 


பார்வையாளர் அரங்குகள் - மெருகேறி அழகாக 


பகலிலேயே பிரகாசிக்க ஆரம்பிக்கும் மின் விளக்குகள்


மைதானத்தின் மற்றொரு தோற்றம் 

விக்கெட் வீழ்த்தப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளே வீரர்கள் - வெளியே நான் 


பந்துவீசத் தயாராகும் மாலிங்க 

மின்னொளிக் கோபுரங்களில் ஒன்று 

தனது ஓட்டத்தை ஆரம்பிக்கத் தயாராகும் மாலிங்க 


off திசைக் காவலர்கள் 


புது மெருகு பெற்றுள்ள பிரம்மாண்ட ஊடகவியலாளர் அறையின் வெளிப்புறத் தோற்றம் 



இரவில் மின் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் துடுப்பாடும் இலங்கை அணி 

அடிக்கத் தயாராகும் தரங்க..


அடுத்த ஓவரின் ஆரம்பத்தில்.. தொப்பி கொடுக்கும் சமி... தமக்குள்ள பேசும் இலங்கை வீரர்கள்.. இடம் மாறும் எதிரணி வீரர்கள்..


நீண்ட கால நெருங்கிய நண்பன்,விளையாட்டுத் துறை செய்தியாளர்,வலைப் பதிவர் அருணுடன் நான் 


Tuesday, May 5, 2009

அரவிந்தவின் புதிய பெராரி கார் !



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரரான அரவிந்த டீ சில்வா ஒரு கார் பிரியர். வேகமாகக் கார் ஓட்டுவதில் அலாதிப் பிரியம் கொண்ட இவர் தான் முதன் முதலாக உலகின் பிரபலமான, விலையுயர்ந்த பெராரி (Ferrari) காரை இலங்கையில் இறக்குமதி செய்து புயல் வேகத்தில் இலங்கை வீதிகளில் ஒட்டிக் காட்டியவர்.

இன்றும் கொழும்பு வீதிகளில் பெராரி கார் ஒன்று பறந்தால் நிச்சயமாக அரவிந்த ஓட்டுனர் இருக்கையில் இருப்பார்...

முன்பெல்லாம் கார் பரிசுப் பொருளாக வைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று நடந்தால் எப்படியாவது அரவிந்த பட்டை கிளப்பி கிண்ணத்தை வென்று தருவதோடு, போட்டித் தொடரின் சிறப்பாட்டக் காரராகவும் தெரிவாகிடுவார் என்பது அப்போது பிரபலமாக இலங்கையில் பேசப்பட்ட ஒரு விடயம்.

எப்போது புதிய model பெராரி கார் இல்லாவிட்டால் ஏதாவது sports கார் வந்தாலும் அதை முதலில் வாங்குபவர் இலங்கையில் அரவிந்தவே தான்.


உலகமே பொருளாதார நெருக்கடியில் கிடக்கும் நேரத்தில்,இலங்கையில் வாகன இறக்குமதி மந்தமடைந்திருக்கும் இந்த நிலையிலும் அரவிந்த டீ சில்வா இறக்குமதி செய்திருக்கலாம் புத்தம் புதிய பெராரி கார் தான் நீங்கள் காணுவது.








 id=


இலங்கையில் இருக்கும் நண்பர்காள் இலங்கை வீதிகளில் எங்கேயாவது இந்த fancy இலக்கத்துடன் பெராரி Ferrari காரைக் கண்டால் அரவிந்தவை உள்ளே எட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள் (கார் புயல் வேகத்தில் சென்று மறைய முதல்)



LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin