இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரரான அரவிந்த டீ சில்வா ஒரு கார் பிரியர். வேகமாகக் கார் ஓட்டுவதில் அலாதிப் பிரியம் கொண்ட இவர் தான் முதன் முதலாக உலகின் பிரபலமான, விலையுயர்ந்த பெராரி (Ferrari) காரை இலங்கையில் இறக்குமதி செய்து புயல் வேகத்தில் இலங்கை வீதிகளில் ஒட்டிக் காட்டியவர்.
இன்றும் கொழும்பு வீதிகளில் பெராரி கார் ஒன்று பறந்தால் நிச்சயமாக அரவிந்த ஓட்டுனர் இருக்கையில் இருப்பார்...
முன்பெல்லாம் கார் பரிசுப் பொருளாக வைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று நடந்தால் எப்படியாவது அரவிந்த பட்டை கிளப்பி கிண்ணத்தை வென்று தருவதோடு, போட்டித் தொடரின் சிறப்பாட்டக் காரராகவும் தெரிவாகிடுவார் என்பது அப்போது பிரபலமாக இலங்கையில் பேசப்பட்ட ஒரு விடயம்.
எப்போது புதிய model பெராரி கார் இல்லாவிட்டால் ஏதாவது sports கார் வந்தாலும் அதை முதலில் வாங்குபவர் இலங்கையில் அரவிந்தவே தான்.
உலகமே பொருளாதார நெருக்கடியில் கிடக்கும் நேரத்தில்,இலங்கையில் வாகன இறக்குமதி மந்தமடைந்திருக்கும் இந்த நிலையிலும் அரவிந்த டீ சில்வா இறக்குமதி செய்திருக்கலாம் புத்தம் புதிய பெராரி கார் தான் நீங்கள் காணுவது.
இலங்கையில் இருக்கும் நண்பர்காள் இலங்கை வீதிகளில் எங்கேயாவது இந்த fancy இலக்கத்துடன் பெராரி Ferrari காரைக் கண்டால் அரவிந்தவை உள்ளே எட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள் (கார் புயல் வேகத்தில் சென்று மறைய முதல்)
This is old car & came after the repair
ReplyDelete