Thursday, April 30, 2009

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

கட்டியணைத்துக் கொஞ்சிக் குலாவி அரவணைக்க வேண்டிய குழந்தைகளைக் குட்டி நாய்கள் போல இப்படிக் கட்டியிழுத்துத் திரிதல் தான் நவீன பிள்ளை வளர்ப்போ?

கட்டிக்கரும்புப் பிஞ்சுகள் இங்கே கட்டி உலா கொண்டுவரப்படுவதைப் பாருங்கள். 



குட்டி நாய்களுக்கும் பட்டி (belt), பிஞ்சுக்கு குழந்தைகளுக்குமா?









தற தறவென்று பிள்ளைகள் இழுத்து செல்லப் படுவதைப் பார்க்கும் போது கொஞ்சமாவது மனம் நோகாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களா?






இதையும் fashion ஆக எங்கள் நாடுகளின் பக்கம் கொண்டுவந்துவிடாதீர்கள்!



11 comments:

  1. ena kodumai anna idu...?
    NALLA IDEA THANE BT nt that much practically good when considering with Love
    -shadheeshan

    ReplyDelete
  2. புடிக்கல தல..

    “இல்லையொரு பிளையென்ரு ஏங்குவோர் பலரிருக்க... “

    கொடுமை...

    ReplyDelete
  3. நம் நாட்டைபோல ஓடி விளையாட பெரிய வீடுகளோ, நண்பர்களோ இல்லை எம்மவர் தஞ்சமடைந்திருக்கும் மேலை நாடுகளில்.

    அதுதான் வெளியில் வந்தால் வாண்டுகளில் துடியாட்டம் மிக அதிகம், அதற்குத்தான் இந்த கடிவாளம்.

    வருமுன் காப்பு.

    வாகன போக்குவரத்திலிருந்து


    இன்னொன்று, பெற்றோரின் உடம்பில் இருக்கும் கொழுப்பு ஓட்டம் எடுக்கும் பிள்ளைகளை விரட்டி பிடிக்க விடாது.

    ReplyDelete
  4. நாய்க்கும் பிள்ளைக்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்கள் (இல்லையிலை நாய்கள்)

    ReplyDelete
  5. //இதையும் fashion ஆக எங்கள் நாடுகளின் பக்கம் கொண்டுவந்துவிடாதீர்கள்! //

    already வந்தாச்சு. பெங்களூரு Forum mall-இல் இருக்கும் McDonalds-இல் ஒரு முறை பார்த்தேன்...அழகான பெண் குழந்தை...எப்படி மனசு வருதோ போங்க

    ReplyDelete
  6. இது வெளிநாடுகளில் மிகவும் சகஜமான ஒன்றுதான்.இதைவிட கொடுமை,ஒரு நூலகத்தில் வாரத்தில் ஒரு முறை குழந்தைகளுக்காக கதை நேரம் இருக்கும்.அங்கு குழந்தைகள் அனைவரும் உட்கார்ந்துதான் இருப்பார்.அங்குகூட ஒரு தாயார் தன் குழந்தையில் கட்டை கழட்ட வில்லை!!அந்த குழந்தையால் எல்லாரையும் போல் எழுந்து அவர்கள் சொல்லித்தருவது போல் நடனமாட முடியவில்லை!!!ரிங் எ ரிங் எ ரோஸ்...போன்ற பாடல்களுக்கு ஓடியாட முடிய வில்லை!!!:-(...குழந்தையை பார்க்க பாவமாக இருந்தாலும் அந்த அம்மாவைப் பார்க்க எரிச்சலாக இருந்தது!

    ReplyDelete
  7. //இதையும் fashion ஆக எங்கள் நாடுகளின் பக்கம் கொண்டுவந்துவிடாதீர்கள்!///

    :(((

    ReplyDelete
  8. அட பாவிங்களா.. குழந்தை கையை புடிச்சு கூட்டிட்டு போறது அவ்வளவு கஷ்ட்டமான காரியமா என்ன..?

    ReplyDelete
  9. இதை நான் முழுமையாக ஆதரிக்கவில்லை ஆனால் இதேபோல் செய்யலாமா என்று நினைத்தேன் பேஷனுக்காக இல்லை நம்முடைய மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக .பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம் ஆனால் பிள்ளைகளை பெற்று அவர்களை கஸ்டபட்டு வளத்தவர்களை கேளுங்கள்.இது சரியா தப்பா என்று.
    Manivannan Frace

    ReplyDelete
  10. This is not a fashion, SAFETY...! When kids are hyper active, it's better to have them safe with a belt. Being a father of two kids, I advise this safety measure if your kids are active. It also happened for me once my 2 years old son quicly ran out of my hand and about to hit by a car. Today's kids are no same as we were 20,30 years back and Parent's need to guard them.

    Muthu, US

    ReplyDelete
  11. இது நூறு வீதம் பாதுகாப்பு விஷயம் தான். இந்தப் பாடங்களில் உள்ள தாய் தந்தைக்கெல்லாம் அன்பில்லையா? எந்த நாட்டிலும் பெற்றோர் பெற்றோர் தான். கடைசிப் படத்தைப் பாருங்கள். தன்னுடைய இடுப்பிலும் கட்டிய தாய் எவ்வளவு சந்தோஷமாக அக்கறையாக அழைத்துச் செல்கிறார். கொஞ்சம் துடியான பிள்ளைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் platform இல் இருந்து பாதையில் இறங்கி விடுவார்கள். இங்கு வாகனங்களின் வேகத்திற்கு இது நல்லது தான். ஆனால் எமது ஆசிய மனோபாவம் இதை ஐயோ என்று நினைப்பதால் நானும் செயற்படுத்தவில்லை.
    Baarathy USA

    ReplyDelete

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin