Friday, April 29, 2016

தேவதையா சூனியக்காரியா? முடிவெடுங்கள்...


நண்பர் ஒருவர் பகிர்ந்த கதையை இன்றைய வெள்ளி சூரிய ராகங்களில் பகிர்ந்துகொண்டேன்.

ஒரு பெண் இளவரசியாவதும் சூனியக்காரி ஆகுவதும் உங்கள் கரங்களில் தான்..
எப்படி?
கேட்டுப் பாருங்கள்..

முன்னைய சூரிய ராகங்கள் நிகழ்ச்சியின் பகுதிகளும் எனது யூடியூப் வீடியோக்களாகப் பகிரப்பட்டுள்ளன.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, March 16, 2016

நாக்பூரில் நியூ சீலாந்து சுழல் சுனாமியில் சிக்கிய இந்தியா - தெறித்து விழுந்த மீம்கள்

இந்தியா 79க்கு சுருண்டு போய் நியூ சீலாந்துக்கு எதிராகத் தோற்ற நிமிடத்திலிருந்து உலகின் பல்வேறு கிரிக்கெட் மூலைகளிலிருந்தும் கொட்டித் தெறித்து விழுந்து வரும் மீம்கள்.

ஒரு தோல்வியினால் இத்தனை நகைச்சுவைகளை உருவாக்க முடியுமென்றால் இன்னும் பல தோல்விகளைப் பார்த்து ரசிக்கலாமே ;)

நிச்சயமாக இவற்றைப் பார்த்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகப் போவது உறுதி...

உருவாக்கியவர்களின் படைப்பாற்றலுக்கு வாழ்த்துக்கள்.
எங்கே இருந்து தான் சிந்திக்கிறார்களோ? எல்லாம் வேற வேற லெவல்.

இவற்றில் இல்லாத, நீங்கள் கண்டு ரசித்த வேறு மீம்கள் இருந்தால் பின்னூட்டங்களாக அனுப்பி வையுங்கள்..
சேர்ந்து சிரிப்போம் :)
Wednesday, October 7, 2015

நீயே உனக்கு ராஜா - தூங்காவனம் - உலக நாயகனுக்காக கவிப்பேரரசுவின் தீப்பொறி வரிகள்

திரைப்படம் : தூங்காவனம்
பாடலை எழுதியவர் : கவிப்பேரரசு வைரமுத்து 
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : 'பத்மஸ்ரீ' கமல்ஹாசன், ஐஸ்வர்யா, யாசீன் நிசார்நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை 
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல்வேளையில் கடல் தூங்குமா?
அதுபோல் இவன் தூங்காவனம் 

எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே..
முன்னேற்றம் உனதே நண்பா 
எந்தத் துக்கமும் உனக்குத் தடையே இல்லையே 
எல்லாமே வெற்றியே நண்பா 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா


வேலை வீசியே, வாளை ஏந்தியே 
வெளிச்சத்தை யாரும் கொல்ல முடியாது...
ஜீவஜோதியாய் நீயும் மாறினால் 
அழிவே கிடையாது...

உன் கொள்கை நெஞ்சம் 
அது தூங்காவனம் 


தோல்வி என்பதே ஞானவெற்றி தான் 
துணிந்தால் கடல்களும் தொடையளவே 
உள்ளம் என்பது என்ன நீளமோ 
அதுதான் உனதளவே 
உன் துள்ளும் உள்ளம் 
அது தூங்காவனம் 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

தீயாய் எழுந்து வாடா 
திசைகள் கடந்தும் பயணம் போடா போடா

அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை 
ரெண்டு கண்களும் தூங்காவனம் 
புயல்வேளையில் கடல் தூங்குமா?
அதுபோல் இவன் தூங்காவனம் 

எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே..
முன்னேற்றம் உனதே நண்பா 
எந்தத் துக்கமும் உனக்குத் தடையே இல்லையே 
எல்லாமே வெற்றியே நண்பா 

நீயே உனக்கு ராஜா 
உனது தலையே உனது கிரீடம் தோழா

-----------------------------------

நீயே உனக்கு ராஜா பாடல் படமாக்கப்படும் விதம்...
தூங்காவனத்தின் தீப்பொறி பறக்கும் - நீயே உனக்கு ராஜா பாடல் | Neeye Unakku Raja Official Making Video
உலக நாயகன் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' - விறுவிறுப்பான புதிய Thoongaavanam - Official Trailer - #2 

Wednesday, March 26, 2014

ஒரு சுடர் இரு சுடர் - ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலேஅஜித் - விஜய் இணைந்து நடித்த ஒரே படம் என்பதைத் தாண்டி வேறெந்த முக்கியத்துவமோ வரலாறோ இல்லாத படம்.

ஆனால் முத்து முத்தான பாடல்கள்.
முக்கியமாக மூன்று பாடல்கள்.

இளையராஜாவின் மும்முரமான பணிகளில் அருண்மொழி இசைப் பணிகளை மேற்பார்வை பார்த்து, பின்னணி இசையும் வழங்கிய படம்.
(கானா பிரபா அண்ணரின் வானொலிப் பேட்டியில் அருண்மொழியே சொல்லியிருந்தார்)

இந்தப்படத்தில் எப்போதும் எனக்குப் பிடித்த அருண்மொழி பாடிய அம்மா பாடல் "அம்மன் கோவில் எல்லாமே" எப்போதுமே மனதுக்கு மிக நெருக்கமானது..

இன்னொரு அருண்மொழி பாடிய பாடல், இவள் யாரோ வான் விட்டு என்று ஆரம்பிக்கும் பாடல்.. (இன்னொரு நாள் பொற்காலப் புதனுக்காக வைத்துள்ளேன்)

இன்னொரு பாடல் இன்று காலையில் ஒலிபரப்பியிருந்தேன்.

ராஜாவின் பார்வையிலே - ஒரு சுடர் இரு சுடர்...

சூரியன் இசைக் களஞ்சியத்தில் காணாமல் போயிருந்த பாடலைத் தேடியெடுத்து ஒலிபரப்பும் வாய்ப்பு பொற்காலப் புதன் மூலம் கிடைத்திருந்தது.

மனோ, ஜானகியுடன் கோரஸ் பாடியுள்ளோரின் குரலிசையும் இனிய அனுபவம் தரக்கூடியது.

இளையராஜா டச்சைத் தாண்டி ஸ்பெஷலாக இந்தப் பாடலில் அருண்மொழி துருத்தித் தெரிகிறாரோ என்று ஒரு ஐயம்.
(பாடலின் இசை மேற்பார்வையும் இசைக் கோர்ப்பும் அருண்மொழி தானா ? அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நாட்டுப்புறப் பாட்டு படத்திலும் உள்ள பாடல்களைக் கேட்கும்போதும் இதே உணர்வு. அந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பும் நம்ம அருண்மொழி தான்)

பாடலின் ஜாதி போடும் இசைக்கோலம், வரிகளின் ஜாலம், அதுபோல மனோ சிற்பியின் வருகையின் பின்னர் மாறிய குரலோடு இல்லாமல், அதற்கு முன் பாடிய தன் இயல்பான குரலில் காதல் வழிந்தோடும் குரலில் பாடியிருப்பது சுகம்.
ஜானகி அம்மையார் குழைகிற இடங்களும் ரசனையுடன் இன்னொரு இசைக் கருவி மீட்டுவது போலவே இருக்கும்.

இதெல்லாவற்றையும் விட இந்தப் பாடலில் முக்கிய பாடக, பாடகியரை விட கோரஸ் பாடகியர்க்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும்.
பாடலின் ஆரம்பத்தில் ஜானகி பாட முதலே கோரஸ் குரல்கள் பாடலை நகர்த்திச் செல்லும் நயமும், பாடல் முழுவதும் கோரஸ் ஒலிகள் பாடலுக்கு தனி வர்ணம் கொடுப்பதும் புதுமை.

அவதாரம் படத்தில் இதே மாதிரி தென்றல் வந்து தீண்டும் போது பாடலில் இசைஞானி விளையாடி இருப்பார்.
எஜமான் பட - ஒரு நாளும் உன்னை மறவாத, ஆலைப்போல் வேலைப் போல்
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - வந்தாள்வந்தால் ராஜகுமாரி பாடல்கள் உடனே ஞாபகம் வந்த மேலும் சில உதாரணங்கள்.

கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்...

அட பாருங்கள் என்னும்போது தான் விஜய் பற்றியும் சொல்லவேண்டி இருக்கிறது.
காதல் படங்களைத் தேர்ந்து நடிக்கும் காலத்தில் (பூவே உனக்காக, லவ் டுடே) இவருக்கான அடையாளமாக இருந்த அந்த அசைவும், நளினமான நடனமும் இந்தப் பாடலிலும் பாருங்கள்.

இந்திரஜா, இவர் தான் பின்னர் மின்சாரக் கண்ணாவிலும் விஜய்யோடு ஜோடி சேர்ந்தவர்.ரசனையான இந்தப்பாடலை இன்று கேட்டுக் கொண்டிருக்கும்போது இன்னொரு பாடலும் ஞாபகம் வர, அந்தப் பாடலின் ஆரம்ப இசையை ஒரு சில வினாடிகள் ஒலிபரப்பிக் காட்டியிருந்தேன்...இரண்டுமே இசைஞானியின் இசை தான்..
மலைக்கோவில் ரஜினியால் பிரபலமாகிப் போனது.

ஆனால் இரண்டு பாடல்களுமே கேட்க கேட்க சுகம் தான்.

Tuesday, September 24, 2013

இணைக் கிளியும் துணைக் கிளியும் - ஒரு இரண்டாம் உலகக் குழப்பம்


இரண்டாம் உலகம் படத்தில் வரும் ​ மன்னவனே என் மன்னவனே​ பாடலைக் கேட்டபோது அவதானித்த விடயம்...​

​"மன்னவனே என் மன்னவனே​​
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வி​ண்​மீ​ன்கள்​ தேடி தேடி எங்கே அ​லை​வேன்"

​என்று பெண் குரல் காதலோடு தேட,​

​ஆண்குரல் பாடும் இந்த வரிகள் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளன...​

 "உன் இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா"

​அதாவது இது காதலன் - காதலி பாடும் பாடல் இல்லையா?

இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி - காதலன் வரும் வரை காவலன்??

கவிஞர் வைரமுத்துவின் வரிகள் மூலமாக இயக்குனர் செல்வராகவன் வைக்கும் ட்விஸ்ட் என்னவென்று அறிய ஆவலுடன் படத்துக்காக வெயிட்டிங்.​

ஏற்கெனவே இரு உலகம் ஒரு கதை என்றும், இரட்டை வேடங்களில் நாயகன் ஆர்யாவும், நாயகி அனுஷ்காவும் என்று பலவிதமாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் பாடலும் சேர்ந்து சுவாரஸ்யமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

குழம்பிக்கொண்டே காத்திருப்போம்.


ரசித்துக்கொண்டே குழம்பியிருப்போம்.


​தொடர்ந்து ஆண்குரல் இவ்வாறே கொஞ்சம் சோகத்துடன் இது காதல் இல்லை என்று மறைமுகமாக சுட்ட, பெண் குரலில் வரும் பாடல் வரிகள் காதலோடு உருகுகிறது.​

ஆ​ண் ​: வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியு​ற ​ நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா


பெ​ண்​: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா

தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
​மொ​த்த கத முடிஞ்சதே


#இரண்டாம் _உலகம் #வைரமுத்து #பாடல்

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin