Tuesday, May 5, 2009

அரவிந்தவின் புதிய பெராரி கார் !



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரரான அரவிந்த டீ சில்வா ஒரு கார் பிரியர். வேகமாகக் கார் ஓட்டுவதில் அலாதிப் பிரியம் கொண்ட இவர் தான் முதன் முதலாக உலகின் பிரபலமான, விலையுயர்ந்த பெராரி (Ferrari) காரை இலங்கையில் இறக்குமதி செய்து புயல் வேகத்தில் இலங்கை வீதிகளில் ஒட்டிக் காட்டியவர்.

இன்றும் கொழும்பு வீதிகளில் பெராரி கார் ஒன்று பறந்தால் நிச்சயமாக அரவிந்த ஓட்டுனர் இருக்கையில் இருப்பார்...

முன்பெல்லாம் கார் பரிசுப் பொருளாக வைக்கப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று நடந்தால் எப்படியாவது அரவிந்த பட்டை கிளப்பி கிண்ணத்தை வென்று தருவதோடு, போட்டித் தொடரின் சிறப்பாட்டக் காரராகவும் தெரிவாகிடுவார் என்பது அப்போது பிரபலமாக இலங்கையில் பேசப்பட்ட ஒரு விடயம்.

எப்போது புதிய model பெராரி கார் இல்லாவிட்டால் ஏதாவது sports கார் வந்தாலும் அதை முதலில் வாங்குபவர் இலங்கையில் அரவிந்தவே தான்.


உலகமே பொருளாதார நெருக்கடியில் கிடக்கும் நேரத்தில்,இலங்கையில் வாகன இறக்குமதி மந்தமடைந்திருக்கும் இந்த நிலையிலும் அரவிந்த டீ சில்வா இறக்குமதி செய்திருக்கலாம் புத்தம் புதிய பெராரி கார் தான் நீங்கள் காணுவது.








 id=


இலங்கையில் இருக்கும் நண்பர்காள் இலங்கை வீதிகளில் எங்கேயாவது இந்த fancy இலக்கத்துடன் பெராரி Ferrari காரைக் கண்டால் அரவிந்தவை உள்ளே எட்டிப்பார்த்துக் கொள்ளுங்கள் (கார் புயல் வேகத்தில் சென்று மறைய முதல்)



Thursday, April 30, 2009

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

கட்டியணைத்துக் கொஞ்சிக் குலாவி அரவணைக்க வேண்டிய குழந்தைகளைக் குட்டி நாய்கள் போல இப்படிக் கட்டியிழுத்துத் திரிதல் தான் நவீன பிள்ளை வளர்ப்போ?

கட்டிக்கரும்புப் பிஞ்சுகள் இங்கே கட்டி உலா கொண்டுவரப்படுவதைப் பாருங்கள். 



குட்டி நாய்களுக்கும் பட்டி (belt), பிஞ்சுக்கு குழந்தைகளுக்குமா?









தற தறவென்று பிள்ளைகள் இழுத்து செல்லப் படுவதைப் பார்க்கும் போது கொஞ்சமாவது மனம் நோகாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களா?






இதையும் fashion ஆக எங்கள் நாடுகளின் பக்கம் கொண்டுவந்துவிடாதீர்கள்!



Wednesday, April 29, 2009

தங்கமோ தங்கம்... ஒரு தகதக பதிவு


நேற்று முன்தினம் அக்ஷயதிருதியை அன்று போட்டிருக்க வேண்டிய பதிவு இது!


தங்கம்.... தங்கம்....தங்கம்....

பணமும், ஆசையும், தங்கமும் கூடிப்போனால் எங்கேயெல்லாம் தங்கத்தை வைத்து என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க....


















சுவாமி பதிவானந்தாவின் அருளுரைப்படி-

தங்கம் பற்றிய இந்த தங்கமான பதிவைப் பார்ப்போருக்கெல்லாம் ஐஸ்வர்யம் பெருகுமென்றும், கமெண்டும் வோட்டும் போடுவோருக்கெல்லாம் தங்கம் அள்ள அள்ளக் குறையாமல் பெருகுமென்பதும் ஐதீகம்!


வாங்க பெண்களே தங்கம் பெருக்குவோம்!
ஐயாமாரே ஓசியில தங்கம் அள்ள வோட்டை அள்ளிப் போடுங்க!


Saturday, April 25, 2009

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..


பார்க்கும் போதே ஈர்த்துவிடும்,வாய் பிளக்க வைக்கின்ற சில விளம்பரங்கள்.. 

கற்பனைத்திறன்,படைப்பாற்றலின் உச்சக் கட்டம்.. 
creativity at the best !!!

ம்ம்ம்ம் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.. 









Thursday, April 23, 2009

கால் முளைத்த மேசைகள்

கற்பனைகளுக்கு எல்லையே இல்லை.. நான்கு கால்களுள்ள உயிரற்ற ஜடங்களான மேசைகளுக்கு உயிரூட்டும் முயற்சி இது..

கொஞ்சம் கலை.. கொஞ்சம் கற்பனை.. கொஞ்சம் கலவரம்...

கால் முளைத்த மேசைகள்..