இரண்டாம் உலகம் படத்தில் வரும் மன்னவனே என் மன்னவனே பாடலைக் கேட்டபோது அவதானித்த விடயம்...
"மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
விண்மீன்கள் தேடி தேடி எங்கே அலைவேன்"
என்று பெண் குரல் காதலோடு தேட,
ஆண்குரல் பாடும் இந்த வரிகள் கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளன...
"உன் இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா"
அதாவது இது காதலன் - காதலி பாடும் பாடல் இல்லையா?
இணைக் கிளி வரும்வரை
ஒரு துணைக் கிளி - காதலன் வரும் வரை காவலன்??
கவிஞர் வைரமுத்துவின் வரிகள் மூலமாக இயக்குனர் செல்வராகவன் வைக்கும் ட்விஸ்ட் என்னவென்று அறிய ஆவலுடன் படத்துக்காக வெயிட்டிங்.
ஏற்கெனவே இரு உலகம் ஒரு கதை என்றும், இரட்டை வேடங்களில் நாயகன் ஆர்யாவும், நாயகி அனுஷ்காவும் என்று பலவிதமாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் பாடலும் சேர்ந்து சுவாரஸ்யமான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
குழம்பிக்கொண்டே காத்திருப்போம்.
ரசித்துக்கொண்டே குழம்பியிருப்போம்.
தொடர்ந்து ஆண்குரல் இவ்வாறே கொஞ்சம் சோகத்துடன் இது காதல் இல்லை என்று மறைமுகமாக சுட்ட, பெண் குரலில் வரும் பாடல் வரிகள் காதலோடு உருகுகிறது.
ஆண் : வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுற நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா
பெண்: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
மொத்த கத முடிஞ்சதே
#இரண்டாம் _உலகம் #வைரமுத்து #பாடல்
No comments:
Post a Comment