சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 63வது பிறந்தநாளுக்காக இணையத்தில் தேடி, சுட்டு எடுத்த அவரது வித்தியாசமான தோற்றங்கள்...
பொதுவாகவே சூப்பர் ஸ்டார் என்ற வட்டத்துக்குள் சிக்கிய பிறகு ஒரே மாதிரியான கதைகள், ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் என்று ரஜினி அரைத்த மாவையே மசாலாக்களை மட்டும் சற்று மாற்றி மாற்றி அரைக்கிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருபவர் ரஜினி .
ஆனால் இந்தப் படங்களைப் பாருங்கள்...
சிக்கிக்கொண்ட வட்டத்துக்குள்ளே இருந்துகொண்டே ரசிகர்களையும் இழக்காமல், தயாரிப்பாளர்களையும் நொடிக்காமல் தன்னால் முடிந்தளவு பாத்திரங்களில் கொஞ்சம் வித்தியாசம் (கொஞ்சமாக இருந்தாலும்) சில மாற்றங்களைக் காட்டி வந்துள்ளார் இந்த ஸ்டைல் காந்தம்.....
இமயமலை தேடி இளைப்பாறும் அறுபத்து மூன்று வயது இளைஞருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
படங்களைப் பல்வேறு இடங்களில் சுட்டு எடுத்துள்ளேன்....
அவற்றை இணையம் ஏற்றி எனக்கும் உதவியிருந்த இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் மற்றும் நலன்விரும்பி நட்புக்களுக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment