Thursday, November 11, 2010

தீனா சுட்ட முருகன் பாடல்..

அண்மையில் வெளிவந்து அனைவரது காதுகளையும் ரம்மியமாக்கி இருக்கும் வல்லக்கோட்டை திரைப்படப் பாடல் 'செம்மொழியே செம்மொழியே' (கலைஞர் எழுதி,இசைப் புயலின் இசையில் வந்த செம்மொழியே பாடல் அல்ல..)
கவிஞர் தபூஷங்கர் எழுதிய அழகான வரிகளை தமிழ்த் திரையுலகின் அற்புத ஜோடி,காலத்தை வென்ற குரல்வளம் கொண்ட S.P.பாலசுப்ரமணியம்+S.ஜானகி பாட தீனா இசை அமைத்துள்ளார்.


ஆனால் கொடுமை இறுவட்டில்,வானொலியில் கேட்ட ஜானகி குரலைத் திரைப்படத்தில் கேட்கமுடியவில்லை. வேறு யாரோ ஒரு பாடகியை வைத்து பாட வைத்துள்ளார்கள்.
இன்றும் இளமை ததும்பும் ஜானகி அம்மையாருக்கு மரியாதை தரவாவது திரையிலும் அவர் குரலையே பின்னணியில் ஒலிக்க விட்டிருக்கலாம்.

அற்புதமான காதல் வரிகளைத் தந்த தபூஷங்கரையும் பாடல் காட்சி காயப்படுத்தி இருக்கும்.
மென்மையான வரிகள் கொண்ட பாடல் திரையில் அள்ளித் தருவதோ கவர்ச்சிக் காட்சியை.


பாடலைக் கேட்டீர்களா?
இணையமெங்கும் தேடியும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க காட்சியுடன் பாடல் கிடைக்கவில்லை.
(அதற்காக இந்தப் பாடலுக்காக வல்லக்கோட்டை பார்த்து இரண்டரை மணி நேரத்தையும் உங்கள் பணத்தையும் வீணாக்காதீர்கள்)

தீனாவின் மெட்டமைப்பையும் இசையமைப்பையும் நீங்கள் மெச்சி இருந்தால் அடுத்த பாடலைக் கீழே கேட்டு விட்டு ஒன்றில் உங்களை நீங்களே நொந்துகொள்வீர்கள்.. இல்லையேல் தீனாவை மனதுக்குள் நீங்கள் அறிந்த கெட்ட வார்த்தைகளால் வைது தீர்ப்பீர்கள்..


இந்த முருக பக்திப்பாடல் T.M.சௌந்தரராஜன் பாடியது.
இசையமைத்தவர் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன்.

எப்படியெல்லாம் உருவி,உல்டா செய்கிறார்கள் பாருங்கள்..

தேவா கந்தர் சஷ்டி கவசத்தை உல்டா செய்து பதினெட்டு வயது (சூரியன் படப் பாடல்) பாடலாக்கினார்.
இப்போது தீனா இன்னொரு பிரபல முருகன் பாடலை உல்டா ஆக்கியுள்ளார்.

இன்று இந்துக்களின் கந்தர் சஷ்டி விரதத்தின் இறுதி நாள்..
அதற்கான சிறப்புப் பதிவாக பக்த கோடிகள் நினைத்துக்கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

நேற்று வல்லக்கோட்டை (நொந்து,வெந்து) பார்த்த பிறகு மனதில் தோன்றிய பதிவு இது..


செம்மொழி என்று ஆரம்பித்தாலே சர்ச்சை தானா? 
  ஒரு வேளை முருகன் தமிழ்க் கடவுள் என்பதனால் துணிச்சலோடும் உரிமையோடும் முருகன் பாடல்களை சினிமாவுக்குள் எடுக்கிறார்களோ???

5 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃ(அதற்காக இந்தப் பாடலுக்காக வல்லக்கோட்டை பார்த்து இரண்டரை மணி நேரத்தையும் உங்கள் பணத்தையும் வீணாக்காதீர்கள்)ஃஃஃஃஃ
அண்ணா அவ்வளவு மோசமா... அர்ஜீனுக்கு இதிலும் 2 ஹுரோயினா..??

sivatharisan said...

தீனா சுட்ட முருகன் 'செம்மொழியே செம்மொழியே' பாடல் கேட்க அருமை

வல்லக்கோட்டை (நொந்து வெந்து) அது அர்ஜீன் படமாச்சே அப்படிதான் இருக்கும்

Riyas said...

//மென்மையான வரிகள் கொண்ட பாடல் திரையில் அள்ளித் தருவதோ கவர்ச்சிக் காட்சியை//

வெங்கடேஷ் படத்தில் இது இல்லை என்றால்தான் ஆச்சரியம்.. பெண் உடம்மையும் மசாலாவையும் மட்டுமே அவர் நம்புகிறார் போலும்..

priyanka87 said...

http://www.youtube.com/watch?v=VvkG7uAC620
Take that

priyanka87 said...

http://www.youtube.com/watch?v=VvkG7uAC620

Post a Comment

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin